×

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

மரக்–கா–ணம், மே 17: விழுப்–பு–ரம் மாவட்–டம் மரக்–கா–ணம் அருகே எக்–கி–யர்–குப்–பத்–தில் கடந்த 13ம் தேதி அம–ரன் என்–ப–வர் விற்ற கள்–ளச்–சா–ரா–யத்தை அப்–ப–கு–தியை சேர்ந்த பலர் வாங்கி குடித்–துள்–ள–னர். இதில் இது–வரை 13 பேர் உயி–ரி–ழந்–துள்–ள–னர். மேலும் கள்–ளச்–சா–ரா–யம் குடித்–த–தால் உடல்–ந–லம் பாதிக்–கப்–பட்–ட–வர்–க–ளில் 41 பேர் விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னை–யி–லும், புதுச்–சேரி ஜிப்–மர் மருத்–து–வ–ம–னை–யில் 3 பேரும், புதுச்–சேரி அரசு மருத்–து–வ–ம–னை–யில் ஒரு–வ–ரும் என மொத்–தம் 44 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரு–கின்–ற–னர்.

இந்–நி–லை–யில், கள்–ளச்–சா–ரா–யம் குடித்து உயி–ரி–ழந்த ஒவ்–வொரு நப–ருக்–கும் ரூ.10 லட்–ச–மும், பாதிக்–கப்–பட்–ட–வர்–களுக்கு ரூ.50 ஆயி–ர–மும் நிவா–ர–ண–மாக வழங்–கப்–ப–டும் என முத–ல–மைச்–சர் மு.க.ஸ்டா–லின் அறி–வித்–தி–ருந்–தார். இதை தொடர்ந்து எக்–கி–யர்–குப்–பம் மீன–வர் பகு–தி–யில் உயி–ரி–ழந்த நபர்–களுக்கு ரூ.10 லட்–சத்–திற்–கான காசோ–லையை அமைச்–சர்–கள் பொன்–முடி, செஞ்சி மஸ்–தான் ஆகி–யோர் நேற்று நேரில் சென்று வழங்கி பாதிக்–கப்–பட்ட குடும்–பங்–களுக்கு ஆறு–தல் கூறி–னர்.

இதை தொடர்ந்து அமைச்–சர் பொன்–முடி கூறு–கை–யில், அதி–மு–க–வின் ஆட்–சிக்–கா–லத்–தில் பள்–ளப்–பட்டி கிரா–மத்–தில் கள்–ளச்–சா–ரா–யம் குடித்து 3 பேர் இறந்–த–னர். காஞ்–சி–பு–ரம் மாவட்–டம் ஒரத்தி கிரா–மத்–தில் ஒரு நபர் இறந்து விட்–டார். ஆனால் தற்–போது தான் தமி–ழ–கத்–தில் கள்–ளச்–சா–ராய சாவு ஏற்–பட்–டுள்–ளது போல் அதி–மு–க–வி–னர் அர–சி–யல் செய்–கின்–ற–னர். இந்த சம்–ப–வங்–களை நான் நியா–யப்–ப–டுத்–த–வில்லை.
இது–போல சம்–ப–வங்–கள் நிகழ கூடாது. இதனை நாங்–கள் அர–சி–யல் ஆக்–க–வில்லை. இந்த சம்–ப–வத்தை கேள்–விப்–பட்–ட–தும் தமிழ்–நாடு முதல்–வர் மு.க. ஸ்டா–லின் உயி–ரி–ழந்த ஒவ்–வொரு குடும்–பத்–திற்–கும் பத்து லட்–சம் ரூபாய் நிவா–ர–ணம் வழங்–கு–வ–தாக உத்–த–ர–விட்–டார்.

மேலும் மருத்–து–வ–ம–னை–க–ளில் சிகிச்சை பெற்று வரு–வதை உட–ன–டி–யாக நேரில் பார்–வை–யிட்டு ஆறு–தல் கூறி அவர்–களுக்கு உயர்–ரக சிகிச்சை அளிக்க உத்–த–ர–விட்–டார். இது–போல் என்–னை–யும், அமைச்–சர் மஸ்–தா–னை–யும் நிவா–ரண உத–வி–களை பாதிக்–கப்–பட்ட குடும்–பங்–களுக்கு நேர–டி–யாக சென்று வழங்க வேண்–டும் என கூறி–னார், என்–றார். அப்–போது விழுப்–பு–ரம் மாவட்ட ஆட்–சி–யர் பழனி, மரக்–கா–ணம் பேரூ–ராட்சி மன்ற தலை–வர் வேத–நா–யகி ஆள–வந்–தார், மாவட்ட துணை செய–லா–ளர் ரவிக்–கு–மார், ஒன்–றிய சேர்–மன் தயா–ளன், துணை சேர்–மன் பழனி, மத்–திய ஒன்–றிய செய–லா–ளர் ரவிச்–சந்–தி–ரன், மரக்–கா–ணம் வட்–டாட்–சி–யர் பால–மு–ரு–கன், செயல் அலு–வ–லர் முரு–கன் மற்–றும் அரசு அதி–கா–ரி–கள் உடன் இருந்–த–னர்.

The post கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : k—gi—yar—gub—pad—on ,
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...